Published : 22 Jan 2021 03:18 AM
Last Updated : 22 Jan 2021 03:18 AM

திண்டுக்கல்லில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தார். டி.ஐ.ஜி., முத்துச்சாமி முன்னிலை வகித்தார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் போலீஸார், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்தவர்கள், தன்னார் வலர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே தொடங்கிய ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. ஹெல்மெட் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். செல்போன் பேசிக் கொண்டே வாகனத்தை ஓட்டக் கூடாது என பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுரேஷ் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x