Published : 22 Jan 2021 03:19 AM
Last Updated : 22 Jan 2021 03:19 AM
திருப்பத்தூர் மாவட்ட வேளாண் துறை சார்பில் கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் 31 உழவர் உற்பத்தி யாளர் குழுவைச் சேர்ந்தவர்கள் நவீன பண்ணை இயந்திரங்களை வாங்க வசதியாக விவசாயிகள், இயந்திர விற்பனையாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட வேளாண்இணை இயக்குநர் ராஜசேகர் வரவேற்றார். இதில், மாவட்ட ஆட் சியர் சிவன் அருள் தலைமை வகித்துப் பேசும்போது, “தமிழகத் தில் விவசாயிகள் வளம் பெற கடந்த2018-19-ம் ஆண்டு கூட்டுப்பண் ணையம் என்ற முன்னோடி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
விவசாயத்துக்கு மனித வளம் குறைந்து விட்டதால், அதை ஈடுசெய்யவும், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும் வேளாண் கருவிகளை பயன்படுத்த பல்வேறு திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. நவீன கருவி களை பயன்படுத்துவதால் வருவாய் அதிகரிக்கிறது.
கூட்டுப்பண்ணை முறையில் ஒரு பகுதியில் ஒரே பயிரை உற்பத்தி செய்யும் விவசாயிகள் ஒருங்கிணைந்து தங்களுடைய பயிர் சாகுபடி செயல்பாடுகளை ஒருங்கிணைத்து கூட்டு முறையில் செயல்படுத்தி, குறைந்த செலவில்அதிக மகசூல் பெற்று, விளைப் பொருட்களை மதிப்புகூட்டி அதிக லாபம் பெறலாம்.
திருப்பத்துர் மாவட்டத்தில் 2020-21ஆம் ஆண்டில் வேளாண் துறையில் 110 உழவர் ஆர்வலர் குழுக்கள், 22 உழவர் உற்பத்தி யாளர் குழுக்களும் தொடங்கப் பட்டுள்ளன.
மேலும், தோட்டக்கலை மூலம் 45 உழவர் ஆர்வலர் குழு, 9 உழவர் உற்பத்தியாளர் குழுவும் தொடங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கும் ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இதைக் கொண்டு பண்ணைக் கருவிகளை விவசாயிகள் வாங்கிக்கொள்ளலாம்.
உழவர் உற்பத்தியாளர் குழுக் களுக்கு தேவையான பண்ணைக் கருவிகள் வாங்குவதற்கு ஏதுவாக 31 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் பண்ணை இயந்திரங்கள் விற்பனையாளர் ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட அளவில் நடத்தப்படுகிறது.
இதில் 11 நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களிடம் நேரிடையாக பேசி தங்களுக்கு தேவையானவற்றை குழுவில் தீர்மானம் நிறைவேற்றி வேளாண் அலுவலர்கள் மூலமாக மானிய விலையில் வேளாண் நவீன இயந்திரங்களான டிராக்டர்,பவர்டில்லர், பவர்வீடர் உள்ளிட்ட வைகளை வாங்கி திருப்பத்தூர் மாவட்டத்தில் விவசாயத்தை பெருக்க வேண்டும்’’ என்றார்..
இந்நிகழ்ச்சியில் வேளாண் துணை இயக்குநர்கள் சீனிவாசன், செல்வராஜூ, தோட்டக்கலை துணை இயக்குநர் கண்ணன், உதவி இயக்குநர் ராகிணி, உதவி செயற்பொறியாளர் ராமச்சந்திரன், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2020-21-ம் ஆண்டுக்கான உழவர்உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் பண்ணை இயந்திரங்கள் விற்பனை யாளர் ஒருங்கிணைப்புக்கூட்டம் ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில், வேளாண்மை அதிகாரிகள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT