Published : 22 Jan 2021 03:19 AM
Last Updated : 22 Jan 2021 03:19 AM

மலை கிராமங்களில் கிடைக்கும் கலப்படமில்லாத தேனை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாகமாற்றி சந்தைப்படுத்த வாய்ப்பு வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உறுதி

வேலூர் மாவட்டம் பீஞ்சமந்தை மலை கிராமத்தில், மதிப்பு கூட்டப்பட்ட பொருள் தயாரிப்பு மற்றும் மாவட்ட அளவிலான பயிற்சியை தொடங்கி வைத்து பேசும் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம். படம்:வி.எம்.மணிநாதன்.

வேலூர்

பீஞ்சமந்தை உள்ளிட்ட மலை கிராமங்களில் கலப்படம் இல்லா மல் கிடைக்கும் உண்மையான தேனை மதிப்பு கூட்டப்பட்ட பொரு ளாக மாற்றி சந்தைப்படுத்த தேவை யான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் அணைக் கட்டு வட்டத்துக்கு உட்பட்ட பீஞ்ச மந்தை மலை கிராமத்தில் சிறுதானி யங்கள், தேன் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தும் பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. பழங்குடியினர் நலத்துறை, பிரதம மந்திரியின் வன் தன் விகாஷ் கேந்திரா, டிவிஎஸ் குழுமம் மற்றும் வாழும் கலை அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்த துடன், 15 குழுக்களுக்கு தேன் சேகரிப்பதற்கான பாதுகாப்பு உபக ரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர்சண்முகசுந்தரம் பேசும்போது, ‘‘பீஞ்சமந்தை, ஜார்தான் கொல்லை, பாலாம்பட்டு கிராம ஊராட்சிகளில் கடந்த 3 ஆண்டு களில் 4 ஆயிரம் பேருக்கு பழங்குடி யினர் ஜாதிச்சான்று வழங்கப் பட்டுள்ளன. விடுபட்டவர்களுக் காக வரும் பிப்ரவரி 2-ம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படும். இதில், அனைவரும் பங்கேற்று ஒரே நாளில் ஜாதிச்சான்று பெற்றுக்கொள்ளலாம்.

அதேபோல், இங்குள்ள அனை வரும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் நலவாரிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும். நல வாரிய அடையாள அட்டையின் மூலமாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 8 விதமான நலத்திட்ட உதவிகள் கிடைக்கும். பிப்ரவரி 2-ம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் அனைவரும் தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும்.

முத்துக்குமரன் மலை முதல் பீஞ்சமந்தை வரை ரூ.5.50 கோடியில் மலைப்பாதை அமைக் கப்படவுள்ளது. பெரியபனப் பாறை, தானிமரத்தூர் கிராமங் களில் ஆரம்பப்பள்ளிகள் அமைக்கப்படவுள்ளன. இந்தப் பகுதியில் இயற்கையாக விளை யும் சாமை, தினை, கேழ்வரகு, கம்பு, மாவள்ளி கிழங்கு, புளி, விளாம்பழம், சீதாப்பழம், நாவல்பழம் உள்ளிட்டவற்றை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி சந்தைப்படுத்த இங்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் முன்னணி நிறுவனங்களின் தேனின் தரம் குறித்து சமீபத்தில் ஆய்வு செய்ததில் கலப்படம் இருப்பது தெரியவந்தது.

ஆனால், இயற்கை சூழலில் இந்தப் பகுதியில் கிடைக்கும் தேன் கலப்படம் இல்லாமல் தரமானதாகவும் இருக்கிறது. இவற்றை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி சந்தைப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள விளை பொருட்களை விற்பனை செய்வதற்காக வேலூரில் விரைவில் திறக்கப்படவுள்ள விமான நிலையம் வளாகம், தங்கக்கோயில், உழவர் சந்தை மற்றும் விஐடி பல்கலைக்கழகம் அருகே விற்பனை கடைகள் அமைத்துக் கொடுக்கப்படும். இங்குள்ள மக்கள் வேலைக்காக அண்டை மாநிலங்களுக்கு செல்லாமல் இங்கேயே தங்கி அவர்கள் பொருளாதார ரீதியாக மேம்பட தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இமயவர்மன், கோபி, வட்டாட்சியர் சரவணமுத்து, வாழும் கலை அமைப்பின் ஆசிரியர் முத்துகுமரன், சீனிவாச சேவை மையம் அறக்கட்டளை கள இயக்குநர் தேவதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x