Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM
திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் வாக்காளர் இறுதிப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
திருப்பூரில் வாக்காளர் இறுதிப் பட்டியலை, அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், திருப்பூர் ஆட்சிய ருமான க.விஜயகார்த்திகேயன் வெளியிட்டார். வாக்காளர் இறுதிப் பட்டியலின்படி தொகுதி வாரியாக வாக்காளர் எண்ணிக்கை விவரம்:
தாராபுரம் (தனி)- ஆண்-125820, பெண் 132111 மற்றும் மூன்றாம் பாலினம் 10. மொத்தம்-257941.
காங்கயம்- ஆண்- 125874, பெண்- 132646 மற்றும் மூன்றாம் பாலினம் 23. மொத்தம் - 258543.
அவிநாசி (தனி)- ஆண்- 136431, பெண்- 144294 மற்றும் மூன்றாம் பாலினம் 6. மொத்தம்- 280731.
திருப்பூர் (வடக்கு)- ஆண் - 191593, பெண் 184440 மற்றும் மூன்றாம் பாலினம் 100. மொத்தம் 376133.
திருப்பூர் (தெற்கு)- ஆண் - 139490, பெண் 136036 மற்றும் மூன்றாம் பாலினம். 34 மொத்தம் 275560.
பல்லடம்- ஆண் - 193139, பெண்- 193904 மற்றும் மூன்றாம் பாலினம் 68. மொத்தம் 387111.
உடுமலைப்பேட்டை- ஆண்- 130001, பெண்- 139113 மற்றும் மூன்றாம் பாலினம் 23. மொத்தம் 269137.
மடத்துக்குளம்- ஆண்- 121419, பெண்- 126189 மற்றும் மூன்றாம் பாலினம் 21. மொத்தம் 247629.
மாவட்டம் முழுவதும் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2493 வாக்குச்சாவடிகளில், ஆண்கள் 1163767, பெண்கள் 1188733 மற்றும் மூன்றாம் பாலினம் 285 என மொத்தம் 2352785 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்கள் 24,966 பேர் அதிகம் உள்ளனர்.
திருப்பூர் ஆட்சியர் கூறும்போது, “வாக்காளர் இறுதிப் பட்டியல்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், சார் ஆட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும்வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக் கும். பொதுமக்கள் வாக்காளர் இறுதிப் பட்டியலை சரிபார்த்து தங்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்” என்றார்.
கூட்டத்தில், வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, திருப்பூர் கோட்டாட்சியர் ஜெகநாதன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல் ஹமீது, தேர்தல் வட்டாட்சியர் ரவீந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 5 லட்சத்து 85 ஆயிரத்து 49 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்தாண்டை விட இந்தாண்டு 13,296 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.உதகை சட்டப்பேரவை தொகுதியில், 98,353 ஆண்கள், 1,06,775பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 10 பேர் என மொத்தம் 2,05,138 வாக்காளர்கள் இடம்பெற்றுள் ளனர். கூடலூர் சட்டப்பேரவை தொகுதியில் 92,108 ஆண்கள், 96,496 பெண்கள் என மொத்தம் 1,88,604 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
குன்னூர் சட்டப்பேரவை தொகுதியில் 91,301 ஆண்கள், 99,999 பெண்கள், 7 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,86,479 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யார் கூறும்போது, “மூன்று சட்டப்பேரவை தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். வாக்காளர் இறுதிப் பட்டியலில் 2.32 சதவீத வாக்காளர் கள் அதிகரித்துள்ளனர்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT