Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM
திட்டக்குடி அருகே உள்ள கீழக் கல்பூண்டி கிராமத்தில் மினி கிளினிக் திறப்பு விழா நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் மலர்கொடி கரும்பாயிரம் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் விவேக் முன்னிலை வகித் தார்.
மங்களூர் ஒன்றிய கிழக்கு அதிமுக ஒன்றியசெயலாளரும், முன்னாள் ஒன்றியத் தலைவ ருமான வாகை இளங்கோவன் கலந்து கொண்டு மினி கிளி னிக்கை திறந்து வைத்து, ஊட்டச்சத்து பெட்டகத்தை தாய்மார்களுக்கு வழங்கினார். ஆலத்தூர் ஊராட்சி தலைவர் மல்லிகை வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர் சரவணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மருதமுத்து மற்றும் சுகாதாரத்துறையினர், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT