Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கிருஷ்ணகிரி

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக விவசாயிகளின் அனைத்து வகையான கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சென்னையநாயுடு, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் விவசாயம் செய்து, தங்கள் குடும்பத்தை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற வங்கிகளில், தங்களிடம் உள்ள ஆவணங்களைக் கொடுத்து கடன் பெற்று விவசாயம் செய்கின்றனர். அவ்வாறு விவசாயம் செய்தாலும், மழை பொய்த்துப் போய்விடுவதாலும், வெள்ளத்தாலும், காட்டு விலங்குகளாலும் பயிர்கள் அழிந்துவிடுகின்றன.

இதனால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாமல், வங்கிகளில் பெற்ற கடனை திரும்பிக் கட்ட முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில் தொடர்புடைய வங்கி அதிகாரிகள் கடன்களை திருப்பி செலுத்த நிர்பந்தம் செய்வதால், வேதனை அடைந்த விவசாயிகள் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து வகையான கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x