Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM
திருச்சி மத்திய மண்டலத்தில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, 49,49,570 ஆண்கள், 51,82,708பெண்கள், 718 இதரர் என மொத்தம் 1,01,32,996 வாக்காளர்கள் உள்ளனர்.
திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவல கங்களில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டன.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலு வலரும், ஆட்சியருமான சு.சிவ ராசு வெளியிட, மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். அதன்படி, 9 தொகுதிகளிலும் சேர்த்து 11,33,020 ஆண்கள், 11,99,635 பெண்கள், 231 இதரர் என மொத்தம் 23,32,886 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 80,095 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 7,648 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
அரியலூரில் ஆட்சியர் த.ரத்னா வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மாவட்டத்தில் உள்ள 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சேர்த்து 2,62,998 ஆண்கள், 2,67,017 பெண்கள், 10 இதரர் என மொத்தம் 5,30,025 வாக்காளர்கள் உள்ளனர்.
பெரம்பலூரில் ஆட்சியர் ப. வெங்கடபிரியா வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மாவட்டத்தில் உள்ள 2 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சேர்த்து 2,82,560 ஆண்கள், 2,93,392 பெண்கள், 34 இதரர் என மொத்தம் 5,75,986 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 20,702 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கரூரில் ஆட்சியர் சு.மலர்விழி வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதி களிலும் சேர்த்து 4,31,934 ஆண்கள், 4,64,699 பெண்கள், 80 இதரர் என மொத்தம் 8,96,713 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 35,111 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 17,480 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டையில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சேர்த்து 6,65,376 ஆண்கள், 6,83,516 பெண்கள், 72 இதரர் என மொத்தம் 13,48,964 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 53,124 பேர் புதிதாக சேர்க்கப் பட்டுள்ளனர்.
நாகையில் ஆட்சியர் பிரவீன் பி.நாயர் வெளியிட்ட இறுதி வாக்கா ளர் பட்டியலின்படி, நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதி களில் சேர்த்து 6,58,437 ஆண்கள், 6,82,815 பெண்கள், 53 இதரர் என மொத்தம் 13,41,305 வாக்காளர்கள் உள்ளனர்.
தஞ்சாவூரில் ஆட்சியர் ம.கோவிந்தராவ் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மாவட் டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சேர்த்து 10,00,709 ஆண்கள், 10,55,671 பெண்கள், 168 இதரர் என மொத்தம் 20,56,548 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 71,266 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 20, 933 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூரில் ஆட்சியர் வே.சாந்தா வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மாவட் டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சேர்த்து 5,14,536 ஆண்கள், 5,35,963 பெண்கள், 70 இதரர் என மொத்தம் 10,50,569 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 44,338 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 9,324 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
காரைக்காலில் ஆட்சியர் அர்ஜூன் சர்மா வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சேர்த்து 74,739 ஆண்கள், 86,705 பெண்கள், 20 இதரர் என மொத்தம் 1,61,464 வாக்காளர்கள் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT