Published : 17 Jan 2021 03:15 AM
Last Updated : 17 Jan 2021 03:15 AM

பசிப்பிணி போக்கும் திட்டம் ஈரோட்டில் தொடக்கம்

ஈரோடு சூளை மல்லிகை நகரில் சக்திதேவி அறக்கட்டளை, நடுநகர் அரிமா சங்கம் சார்பில் தொடங்கப்பட்ட பசிப்பிணி போக்கும் திட்டத்திற்கு சக்தி மசாலா நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் பி.சி.துரைசாமி மற்றும் இயக்குநர் டாக்டர் சாந்தி துரைசாமி ஆகியோர் ஓராண்டுக்கான செலவுத் தொகை ரூ.4,36,800-க்கான காசோலையை, சங்கத் தலைவர் அரிமா திலகரிடம் வழங்கினர்.

ஈரோடு

ஈரோடு சூளை மல்லிகை நகரில் ஈரோடு சக்தி மசாலா நிறுவனங்களின் சமுதாய மேம்பாட்டுக்கான சக்திதேவி அறக்கட்டளை, ஈரோடு நடுநகர் அரிமா சங்கம் சார்பில் பசிப்பிணி போக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. சக்தி மசாலா நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் பி.சி. துரைசாமி மற்றும் இயக்குநர் டாக்டர் சாந்தி துரைசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இத்திட்டத்தின் மூலம் 50 ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று மதிய உணவு நாள்தோறும் பகல் 12.30 மணியளவில் வழங்கப்படும். இதற்கான மொத்த செலவையும் சக்திதேவி அறக்கட்டளை ஏற்றுக் கொள்ளும் என அறிவித்து, அதற்கான ஓராண்டு செலவு ரூ.4 லட்சத்து 36 ஆயிரத்து 800 காசோலையாக வழங்கப்பட்டது.

இத்தொகை ஈரோடு நடுநகர் அரிமா சங்கத் தலைவர் அரிமா திலகரிடம் வழங்கப்பட்டது. மேலும் இந்தப் பகுதியில் உள்ளவர்கள் மாமரத்துப்பாளையத்தில் இயங்கி வரும் சக்தி மருத்துவமனையில் இலவசமாக மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக அரிமா இயக்கத்தின் முன்னாள் கூட்டு மாவட்டத் தலைவர் அரிமா என். முத்துசாமி, ஈரோடு மாநகராட்சி முன்னாள் மண்டலத்தலைவர் முனியப்பன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி மற்றும் ஓய்வு பெற்ற மெட்ரிக் பள்ளிகளின் அதிகாரி ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் அரிமா சரவணன் மற்றும் திட்ட இயக்குநர் சிவகுமார் ஆகியோர் செய்தி ருந்தனர். அரிமா உறுப்பினர்கள், சூளை பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x