Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM
ஸ்மார்ட் செல்போன்கள் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதுக்கு மேற்பட்ட உயர்கல்வி படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள், வேலையில்லாத பட்டதாரி மாணவ, மாணவிகள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் புரியும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் காதுகேளாத வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் செல்போன்கள் வழங்கப்பட உள்ளது. அதன்படி, ஸ்மார்ட் செல்போன்கள் பெற மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், கல்வி படிப்பதற்கான சான்று, பணி சான்று, சுய தொழில் புரிவதற்கான சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டைநகல் மற்றும் ஒரு பாஸ்போர்ட்அளவு புகைப்படத்துடன் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அறை எண் 23-ல் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT