Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM
ஊராட்சிகளில் தொழில்சார் சமூக வல்லுநர் பணிக்கு தகுதியான நபர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத் தில் கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டணம் ஆகிய ஊராட்சி ஒன்றியங் களில் செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 102 ஊராட்சிகளில் தலா ஒருவர் வீதம், தொழில்சார் சமூக வல்லுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 20 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
மேற்கண்ட தகுதி உடைய நபர்கள் வரும் 18-ம் தேதிக்குள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலமாவோ அல்லது ஒன்றிய திட்ட அலுவலகத்தில் நேரிலோ விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதியான நபர்கள் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதத்துக்கு அதிகபட்சம் 20 நாட்கள் பணியாற்ற வேண்டும். நாள் ஒன்றுக்கு ரூ.250 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட செயல் அலுவலர், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம், கிராம சேவை மையக் கட்டிடம், ராயக் கோட்டை மேம்பாலம் அருகில், கட்டிகானப்பள்ளி, கிருஷ்ணகிரி என்ற முகவரியிலோ அல்லது 04343-296718 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். எனவே, மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த தகுதியுள்ள பெண்கள் தொழில்சார் சமூக வல்லுநர்கள் தேர்வில் பங்கேற்று பயன்பெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT