ஆரணியில் நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசும் எம்எல்ஏ தூசி கே.மோகன்.
Regional02
உதயநிதி ஸ்டாலினை கண்டித்து ஆரணியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, தி.மலை மாவட்டம் ஆரணியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
தமிழக முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக கூறி திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அதிமுக சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தூசி.கே.மோகன் எம்எல்ஏ தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.
அப்போது அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.
