Published : 11 Jan 2021 03:25 AM
Last Updated : 11 Jan 2021 03:25 AM
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகிலுள்ள நேரலகிரி கிராமத்தில் கோயில் திருவிழா நடந்து வருகிறது. விழாவின் ஒருபகுதியாக, நேற்று எருது விடும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்காக சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன.
எருது விடும் விழாவைக் கண்டு ரசிக்க சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். இவர்களில் பலர் எருது விடும் நிகழ்ச்சி நடக்கும் தெருக்களிலும், சிலர் ஆங்காங்கே வீடுகளின் மொட்டை மாடி, பால்கனி போன்ற இடங்களில் நின்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஒரு வீட்டின் மேல் தளத்தில் 30-க்கும் மேற்பட்டவர்கள் நின்றபடி நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த வீட்டை ஒட்டி தெருவோரம் அமைக்கப் பட்டிருந்த திண்ணையிலும் ஏராளமானவர்கள் அமர்ந்திருந் தனர். அப்போது, பாரம் தாங்காமல் அந்த கட்டி டத்தின் மேற்கூரை வளைந்தது.
அதனால், மாடியில் அமைக்கப்பட்டிருந்த சுற்றுச் சுவர் சரிந்து, கீழே திண்ணையில் அமர்ந் திருந்தவர்கள் மீது விழுந்தது.
மேலும், சுவர் சரிந்தபோது மாடியில் இருந்தவர்களும் இடிபாடுகளுடன் கீழே விழுந்தனர். இந்த சம்பவத்தில் நேரலகிரியைச் சேர்ந்த மேகா (8) என்ற சிறுமியும், எட்டிப்பள்ளியை சேர்ந்த முனிபாலா (62) என் பவரும் சம்பவ இடத்தில் உயிரிழந் தனர். இவர்கள் தவிர 30 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு வேப்பனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவர் களில், 19 பேர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கங்காதர் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார். டிஎஸ்பி சரவணன் வழிகாட்டுதலில் வேப்பனப்பள்ளி காவல் ஆய்வாளர்(பொ) ரஜினி மேற்கொண்ட விசாரணையில், அனுமதி பெறாமல் எருது விடும் விழா நடத்தப்பட்டது தெரிய வந்தது. எனவே, விழாவுக்கு ஏற்பாடு செய்த நேரலகிரி கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், பத்மநாதன் (50), அம்மாசியப்பன்(65), திம்மராயப்பன்(50), முனிராஜ்(67), நாகராஜ்(51) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நாகராஜ், சிவா ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் காய மடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் ஜெய சந்திர பானு ரெட்டி, வேப்பனப்பள்ளி சட்டப் பேரவை உறுப்பினர் முருகன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT