Published : 11 Jan 2021 03:27 AM
Last Updated : 11 Jan 2021 03:27 AM

வேலூர் மாவட்டத்தில் 395 காவலர்கள் கிராம விழிப்புணர்வு காவல் குழுவில் சேர்ப்பு

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்க 395 காவலர்கள் ‘கிராம விழிப்புணர்வு காவல் குழுவில்’ நியமிக்கப் பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், வெளி மாநிலங்களில் இருந்து ஊடுருவியுள்ள குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்யவும், பொதுமக்களின் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க வைக்க ஒவ்வொரு கிராமங்கள் தோறும் ‘கிராம விழிப்புணர்வு காவல் குழு’ ஒன்றை அமைக்க வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் உத்தர விட்டுள்ளார்.

கிராம விழிப்புணர்வு காவல் குழு மூலம் பொதுமக்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையேயுள்ள இடைவெளியை சரி செய்ய இக்குழு பெரிய பாலமாக இருக்கும் என்பதால், வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் தோறும் கிராம விழிப்புணர்வு காவல்குழு அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த குழுவில் ஒரு காவலர் நியமிக்கப்படுள்ளார். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அந்த காவலருடன் இணைந்து செயல்படுவார்கள். கிராம விழிப்புணர்வு காவல் குழு பொது மக்களின் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

கிராம மக்களின் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான போராட்டங்களாக இருந்தாலும், முன்பகை தொடர்பான கோஷ்டி மோதல், சொத்து மற்றும் இடத்தகராறில் ஏற்படும் மோதல், பழித்தீர்க்கும் சம்பவங்கள் தொடர்பான மோதல்கள் ஏற்படும் சூழ்நிலை உருவானால், அதை உடனடியாக சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகளுக்கு கொண்டு சென்று பிரச்சினையை உடனுக்குடன் தீர்த்து வைக்க கிராம விழிப்புணர்வு காவல் குழு உதவியாக இருக்கும்.

இது மட்டுமின்றி சாராய விற்பனை, போதைப் பொருள் விற்பனை, பாலியல் ரீதியான துன்புறுத்தல், நில அபகரிப்பு, வீடு புகுந்து திருட்டு, மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களை தடுக்க இக்குழுவினர் தீவிரமாக செயல்படுவார்கள்.

கிராமமக்கள் தங்களுக்கான குறைகளை காவல் நிலையத்துக்கு சென்று தெரிவிப்பதை காட்டிலும் கிராம விழிப்புணர்வு காவல் குழுவினரிடம் புகாராக கொடுத் தால், அவர்கள் விரைந்து செயல் பட்டு பிரச்சினைகளை பேசி தீர்த்து வைப்பார்கள்.

இதனால், கிராமமக்கள் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு அலுவலகங்களுக்கு தேடிச்சென்று அலைய வேண்டிய நிலை இருக்காது என காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் முதற் கட்டமாக 395 காவலர்கள் கிராம விழிப்புணர்வு காவல் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர் களுக்கு, கிராம மக்கள் முழு ஒத்து ழைப்பு வழங்க வேண்டும் என காவல் துறை சார் பில் தெரி விக்கப் பட்டுள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x