Published : 10 Jan 2021 03:29 AM
Last Updated : 10 Jan 2021 03:29 AM
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாலாஜாபாத் அருகில் உள்ள தென்னேரி பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலர் இ.லாரன்ஸ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் சி.சங்கர், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாசறை செல்வராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் கே.நேரு, திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT