Published : 07 Jan 2021 03:15 AM
Last Updated : 07 Jan 2021 03:15 AM

நல்லாம்பட்டியில் மினி கிளினிக் தொடக்கம்

திண்டுக்கல் அருகே நல்லாம்பட்டியில் மினிகிளினிக்கை தொடங்கிவைத்து பார்வையிட்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே நல்லாம்பட்டியில் மினி கிளினிக் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு தலைமை வகித்தார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் நளினி வரவேற்றார். நல்லாம்பட்டியில் மினி கிளினிக்கை தொடங்கிவைத்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசுகையில், ஏழை, எளிய மக்கள் காய்ச்சல் உள்ளட்ட சிறுபிரச்சினைகளுக்காக அரசு மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்த்து அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே சிகிச்சை பெற ஏதுவாக அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 65 இடங்களில் மினி கிளினிக் செயல்படவுள்ளது. தமிழக அரசு செயல்படுத்தும் இதுபோன்ற திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் மருதராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x