Published : 07 Jan 2021 03:16 AM
Last Updated : 07 Jan 2021 03:16 AM
வேலூர் அண்ணாசாலையில் உள்ள ஏலகிரி வளாகத்தில் ‘உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை உதவி இயக்குநர் அலுவலகம்’ இயங்கி வருகிறது. இங்கு, உள்ளாட்சி நிதித்துறை உதவி இயக்குநராக பரந்தாமன் (52) என்பவர் பணியாற்றி வருகிறார்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில்உள்ள பேரூராட்சி அலுவலகங்களில் மேற் கொள்ளப்பட்டு வரும் செலவினங்களை தணிக்கை செய்யும் பணிகள் இங்கு மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி அலுவலர்களிடம் இருந்து உதவி இயக்குநர் உள்ளிட்ட அலுவலக ஊழியர்கள் பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் பெறுவதாக வேலூர் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல் துறையின ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், வேலூர் லஞ்ச ஒழிப்புப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமையில், ஆய்வாளர் விஜய் உள்ளிட்ட காவல் துறையினர் உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு நேற்று மாலை சென்றனர். அப்போது, உதவி இயக்குநர் பரந்தாமன் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில், உதவி இயக்குநர் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் இருந்து கணக்கில் வராத பணம் 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து அங்குள்ள முக்கிய ஆவணங்கள் மற்றும் பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT