Published : 06 Jan 2021 03:14 AM
Last Updated : 06 Jan 2021 03:14 AM

எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கம்

சேத்தியாத்தோப்பு எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை விவசாயிகள் தொடங்கி வைத்தனர்.

கடலூர்

சேத்தியாத்தோப்பு எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நடப்பு 2021 ஆண்டின் கரும்பு அரவை நேற்று தொடங்கியது. ஆலையின் தலைவர் கானூர் பாலசுந்தரம் தலைமை வகித்தார்.

அரவை தொடங்குவதை யொட்டி யாகம் வளர்க்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.பின்னர் முதல் கரும்பு டிராக்டர் எடை மேடைக்கு கொண்டு வரப்பட்டு தீபாராதணை காட்டப்பட்டது. பூச ணிக்காய் உடைத்து அரவைப் பகுதிக்கு கரும்புகள் கொண்டு செல்லப்பட்டன. ஆலையின் தலைவர் மற்றும் கரும்பு விவசாயிகள் முதல் கரும்பை கன்வேயர் பெல்டில் எடுத்து வைத்து கரும்பு அர வையை தொடக்கி வைத்தனர்.

நடப்பு அரவை பருவத்தில் 3லட்சம் டன் கரும்பு அரவைசெய்ய இலக்கு முடிவு செய்யப் பட்டுள்ளது, விவசாயிகளுக்கு உடனடியாக கரும்பு பணம் கிடைக் கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஆலையின் தலைவர் கானூர் பாலசுந்தரம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஆலையின் மேலாண் இயக்குநர் சுப்ரமணியன், சேத்தியாத்தோப்பு அதிமுக நகர செயலாளர் மணிகண்டன், கரும்பு விவசாயிகள் தேவதாஸ் படையாண்டவர், சிட்டி பாபு, இளவரசன், கார்மாங்குடி வெங்கடேசன் மற்றும் ஆலையின் பல்வேறு துறை அதிகாரிகள், பணியாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x