Published : 06 Jan 2021 03:14 AM
Last Updated : 06 Jan 2021 03:14 AM
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதச் சட்டங்களை எதிர்த்து போராட்டங்களை நடத்துவோம் என ராமநாதபுரம் மாவட்ட புதிய காங்கிரஸ் தலைவர் செல்லத்துரை அப்துல்லா தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் ராம நாதபுரம் மாவட்டத் தலைவராக இருந்த தெய்வேந்திரன் மாற்றப் பட்டு, புதிய மாவட்டத் தலைவராக ஏ.செல்லத்துரை அப்துல்லா நிய மிக்கப்பட்டார். இவர் செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப் பினராகவும், செய்யது அம்மாள் கலைக் கல்லூரித் தாளாளராகவும் உள்ளார். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் பாபு, வரதராஜன் ஆகியோர் கட்சியின் மாநில பொதுச் செயலாளராகவும், மாநிலச் செயலாளராக செந்தாமரைக் கண்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினராக பாரிராஜன் ஆகி யோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய மாவட்டத் தலைவர் ஏ.செல்லத்துரை அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது, பாஜக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களையும் துன்புறுத்தி ஜிஎஸ்டி வரி வசூலிக்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக பெட்ரோல்,டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. சுங்கவரி அதிகமாக வசூலிக்கப்படுகிறது. டெல்லியில் விவசாயிகள் துயரம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். உழவர்களுக்காகவும், மீனவர்களுக்காகவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும். நல்லாட்சி அமைய காங்கிரஸ் பாடுபடும். மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதச் சட்டங்களைக் கண்டித்து தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதி, கிருஷ்ணராஜ், வட்டாரத் தலைவர் காருகுடி சேகர், நகர் தலைவர் கோபி, மாவட்டச் செய்தி தொடர்பாளர் கவுசிக் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT