Published : 05 Jan 2021 08:22 AM
Last Updated : 05 Jan 2021 08:22 AM

தகுதியுள்ள அனைவருக்கும் கடன் வழங்க சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில், மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமாரிடம் நேற்று அளிக்கப்பட்ட மனுவில், "சாலையோர வியாபாரிகளுக்கு ஸ்வா நிதி திட்டத்தின் கீழ், கடன் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் சாலையோர வியாபாரிகள் வங்கியில் கடன் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. ஆனால், கடன் கேட்டு விண்ணப்பித்தால், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் விரைவாக வழங்கிவிட்டு, பெரும்பாலானவர்களுக்கு மாதக் கணக்கில் இழுத்தடிக்கிறார்கள்.

உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலமாக அடையாள அட்டை பெற்றுள்ள வர்களுக்கு மட்டுமே கடன் அளிப்பதாக தெரியவருகிறது. அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் கடன் என்றால், இல்லாதவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அடையாள அட்டை இல்லாமல், ஆயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகள் பிழைத்து வருகிறார்கள். எனவே, தகுதியான அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் கடன் வழங்க வேண்டும். விண்ணப்பித்தோருக்கு வங்கிகள் காலம் தாழ்த்தாமல் கடன் வழங்க வேண்டும். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் ஆவண செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x