Published : 05 Jan 2021 08:22 AM
Last Updated : 05 Jan 2021 08:22 AM

என்எல்சி இன்கோசர்வ் தொழிலாளி உயிரிழப்பு

கடலூர்

நெய்வேலி அடுத்த வாணதிரா யபும் ஊராட்சி தென்குத்து புதுநகரை சேர்ந்தவர் ராஜன் (எ) செல்வராஜ் (50). இவர். என்எல்சி முதலாவது சுரங்க விரிவாக்கத்தில் இன்கோசர்வ் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். பள்ளி மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி ஆசிரியராகவும் இருந்து வந்தார்.

நேற்று காலை வழக்கம் போல் இவர் பணிக்குச் சென்ற இடத்தில் திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அதனைப் பார்த்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாக கூறினார்.

தகவல் அறிந்து வந்த உறவினர்கள் என்எல்சி பொது மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் அவரது உடலை பெற்று கொள்ள மறுத்தனர்.

மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க கோரி என்எல்சி அதிகாரிகளுடன் தொழிற்சங்க நிர்வாகிகள் அவரது உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து நெய்வேலி நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x