Published : 05 Jan 2021 08:24 AM
Last Updated : 05 Jan 2021 08:24 AM
உயர் மின் கோபுரம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை எனக் கூறி தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக தனியார் நிறுவனம் மூலம் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரி வித்து, தி.மலை மற்றும் துரிஞ்சாபுரம் ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகள், ஆட்சியர் அலுவ லகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில், காவல் துறையினரின் தடைகளை தகர்த்து, ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறும் போது, “உயர்மின் கோபுரங்களால் விவசாய நிலங்கள் சேதமடைகிறது. ஒரு உயர் மின் கோபுரம் அமைக்க 20 சென்ட் நிலத்தை பறித்துக்கொண்டனர். உயர் மின் கோபுரம் அமைக்கக்கூடாது என்ற எங்களின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்கவில்லை. எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை, காவல் துறையினர் மூலம் அடித்து விரட்டும் நிகழ்வு தொடர்கிறது. எங்களிடம் இருந்து பறித்துக் கொண்ட விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடும் கொடுக்கவில்லை. இதற்கு தீர்வு காண வலியுறுத்தி மாவட்ட ஆட்சி யரிடம் பலமுறை முயைிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை” என்றனர்.
இதையடுத்து அவர்களிடம், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இதனால், அவர்களை அங்கிருந்து அப்புறப் படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கிடையில், ஆட்சி யர் சந்தீப் நந்தூரியிடம், முக்கிய நபர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அரசு விதிகளின்படி, சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இழப்பீடு தொகை செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இருப்பினும், விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர், அவர் களிடம் காவல் துறையினர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட போராட் டத்தை தீவிரப்படுத்துவோம் எனக் கூறி விவசாயிகள் கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT