Published : 03 Jan 2021 03:22 AM
Last Updated : 03 Jan 2021 03:22 AM
கடலூர் மாவட்டம் புதுச்சத்தி ரம் அருகே உள்ளது வேளங்கிராயன் பேட்டை. இங்கு கடந்த 31-ம் தேதி வெட்டுக்காயங்களுடன் ஆண்சடலம் ஒன்று புதைக்கப்பட்டி ருந்ததை கண்டறிந்து, போலீஸார் தோண்டி எடுத்து விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர் சேத் தியாத்தோப்பு அருகே உள்ள பெரியநற்குணம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் சத்தியராஜ் (32) என்பது தெரிய வந்தது. இதனைதொடர்ந்து புதுச்சத்திரம் போலீஸார் நேற்று முன்தினம் சத்தியரா ஜின் மனைவி தீபாவை (27) காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமை யிலான டெல்டா படை போலீஸார் இந்த கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான சேத்தி யாதோப்பு வடக்கு சென்னிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் (29), மற்றும் அவரது கூட்டாளிகள் சேத்தியாதோப்பு சக்திவிளாகம் பகுதியை சேர்ந்த அராத்து என்கிற வினோத் (23), விருத்தாசலத்தைச் சேர்ந்த சுபாஷ் (18), அருண் (20, கார்த்தி (18) ஆகிய 5 பேரையும் பிடித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய கார், இரண்டு பைக் மற்றும் ஐந்து செல் போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கொலை செய்யப்பட்ட சத்தியராஜின் மனைவி தீபாவுக்கும் முக்கியக் குற்றவாளி ஐயப்பனுக்கும் ஏற்பட்ட கூடாத நட்பால்சத்யராஜ் கொலை செய்யப் பட்டதாக போலீஸார் தெரிவித் தனர்.
தீபா, ஐயப்பன் உள்ளிட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டனர். தீபாவுக்கு இரு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT