Published : 03 Jan 2021 03:22 AM
Last Updated : 03 Jan 2021 03:22 AM
விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, ஜன.9-ம் தேதி வேதாரண் யத்தில் இருந்து தஞ்சாவூர் வரை விவசாயிகள் நீதி கேட்டு நெடும் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டியில் நேற்று நடை பெற்ற தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர் வாகிகள் அவசரக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
தமிழக அரசு நடப்பாண்டு நெல் கொள்முதல் விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்ய முன்வர வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன் முழுவதையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.9-ம் தேதி நாகை மாவட்டம் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு இல்லத் திலிருந்து, ஆயிரக்கணக்கான விவசாயிகள் தஞ்சை ராஜ ராஜசோழன் நினைவிடத்தை நோக்கி நெடும்பயணம் மேற் கொள்ள உள்ளனர். வழியில் காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் நகரங்களில் விவசாயிகள் பேரணியாக சென்று, ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.
விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கவும், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினரின் கவனத்தை ஈர்க்கவும், விவசாயிகளுக்கு உதவிகரமான திட்டங்களைக் கொண்டு வருவதற்கு நீதிகேட்கின்ற நெடும் பயணமாகவும் இந்தப் பேரணி அமைய உள்ளது என்றார்.
முன்னதாக நடைபெற்ற கூட்டத்துக்கு, திருவாரூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்பையன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் தர், கவுரவத் தலைவர் நீலன் அசோகன், துணைச் செயலாளர் எம்.செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT