Published : 03 Jan 2021 03:23 AM
Last Updated : 03 Jan 2021 03:23 AM

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 48 மையங்களில் இன்று குரூப்-1 தேர்வு 14,386 பேர் பங்கேற்க உள்ளனர்

வேலூர்/தி.மலை

வேலூர், தி.மலை மாவட்டங்களில் 48 மையங்களில் இன்று நடைபெற உள்ள குரூப்-1 தேர்வில் 14,386 பேர் பங்கேற்க உள்ளனர்.

துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவா ளர், வணிக வரித் துறை உதவி ஆணையர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆகிய உயர் பதவி களுக்கான 66 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் முதல் நிலை தேர்வு (குருப் – 1) இன்று (3-ம் தேதி) நடைபெறஉள்ளது. பொது அறிவுத்தாள் தேர்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்- 1 தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக, 31 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வில் 8,920 பேர் பங்கேற்க உள்ளனர். தேர்வு தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் ஆட்சி யர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

வட்டாட்சியர் விஜயன் தலை மையில் நடைபெற்ற கூட்டத்தில், காவல் துறையினர், மின்வாரிய அதிகாரிகள், போக்குவரத்து துறை யினர், சுகாதார துறையினர் உள்ளிட் டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் காவல் துறையினர் பாதுகாப்பு அளிப்பது, தடையில்லாத மின் சாரம் வழங்குவது, கரோனா தொற்றுவிதிமுறைகளை பின்பற்றி தேர்வில் பங்கேற்க வரும் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்வது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. மேலும், தேர்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டது.

தேர்வில் பங்கேற்பவர்கள் காலை 9.15 மணிக்குள் தேர்வு மையத்துக்கு வரவேண்டும். தேர்வில் கருப்பு நிற பந்துமுனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும். தேர்வு மையத்துக்கு காலை 9.15 மணிக்கு மேல் வருப வர்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், தேர்வர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட எந்தவித எலக்ட்ரானிக் சாதனங்களையும் எடுத்துவர அனுமதியில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் உள்ள 5 கல்லூரிகள் மற்றும் 2 பள்ளிகள் என 7 இடங்களில் அமைக்கப் பட்டுள்ள 17 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

இந்த தேர்வில், திருவண்ணா மலை மாவட்டத்தைச் சேர்ந்த 5,466 பேர் பங்கேற்க உள்ளனர். 17 முதன்மை கண்காணிப்பாளர்கள், 3 நடமாடும் குழுக்கள் மூலம் தேர்வு பணி கண்காணிக்கப்பட உள்ளது. மேலும், 18 வீடியோகிராபர்கள் மூலம் வீடியோவில் தேர்வு மற்றும் கண்காணிப்பு பணி பதிவு செய்யப்பட உள்ளது.

தேர்வு எழுத வருபவர்கள் மற்றும் தேர்வு மையங்களின் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கண்காணிப்புப் பணியில்ஈடுபடுபவர்கள் முகக்கவசம் அணிந்துவர உத்தரவிடப்பட்டுள் ளது. திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x