Published : 02 Jan 2021 03:24 AM
Last Updated : 02 Jan 2021 03:24 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடர்பான புகார்களை வட்டவழங்கல் அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், 5,81,924 மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ.2,500 உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு நியாய விலை கடைகள் மூலமாக வரும் 4-ம் தேதி முதல், 12-ம் தேதி வரை விநியோகம் செய்யப்பட உள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாத விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 13-ம் தேதி அன்று வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறும் மின்னணு குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும் பொங்கல் பரிசுத் தொகுப்புவழங்கப்படும். அதிக எண்ணிக்கையிலானோர் நியாய விலைக்கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்க்கும் பொருட்டு குடும்ப அட்டையின் எண்ணிக்கையின் அடிப்படையில் சுழற்சி முறையில் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
சுழற்சி முறையில் பொங்கல்பரிசுத் தொகுப்பை அட்டைதாரர்கள் பெற ஏதுவாக, ஏற்கெனவே வீடுகளில் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் டோக்கன்களை வழங்கியுள்ளனர். குடும்ப அட்டை தாரர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நாள், நேரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம்.
பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக தகவல் மற்றும் புகார் ஏதேனும் இருப்பின் அதைவட்ட வழங்கல் அலுவலர்களின் அலைபேசி எண்களானதிருவள்ளூர் - 9445000177, திருத்தணி - 9445000182,பள்ளிப்பட்டு - 9445000183,பொன்னேரி - 9445000178, கும்மிடிப்பூண்டி - 9445000179, ஊத்துக்கோட்டை - 9445000180, பூந்தமல்லி - 9445000181, ஆவடி - 9894939884, ஆர்.கே.பேட்டை - 9500692613 ஆகியவை மூலமும், மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசிஎண்ணான 044 - 27662400 மூலமும் தெரிவிக்கலாம் என, மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாது காப்புஅலுவலகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT