Published : 02 Jan 2021 03:25 AM
Last Updated : 02 Jan 2021 03:25 AM

காரைக்குடி அருகே விடுமுறை நாளில் திறப்பதில் குழப்பம் முறையான அறிவிப்பு இல்லாததால் மூடப்பட்ட மினி கிளினிக்

காரைக்குடி அருகே அரியக்குடியில் மூடப்பட்ட மினி கிளினிக்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அரசு விடுமுறை நாளான நேற்று மினி கிளினிக் மூடப்பட்டது. முறையான அறிவிப்பு இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் 5 மொபைல் கிளினிக் உட்பட 36 இடங்களில் கிளினிக்குகள் தொடங்கப்படுகின்றன. அவற்றை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தொடங்கி வைத்து வருகிறார். காரைக்குடி அருகே அரியக்குடியில் மினி கிளினிக் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரசு விடுமுறை நாளான நேற்று அரியக்குடி மினி கிளினிக் மூடப்பட்டது. மருத்துவத் துறை அத்தியாவசியப் பணியில் வருவதால் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மினி கினிக்குகளுக்கு விடுமுறை கிடையாது. மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டால், மாற்றுப் பணியாளர்களை நியமித்து மருத்துவமனைகள், கிளினிக்குகளை திறக்க வேண்டும்.

ஆனால் அரியக்குடி மினி கிளினிக் நேற்று மூடியிருந்ததால் கிராமம க்கள் அதிருப்தி அடைந்தனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் சிலர் கூறுகையில், விடுமுறை நாட்களில் மினி கிளினிக்குகளை திறப்பது குறித்து முறையான அறிவிப்பு இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மினி கிளினிக்குகள் மூடப்பட்டுள்ளது என்று கூறினர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மினி கிளினிக் மருத்துவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் அன்றைய தினமும் கிளினிக் திறந்திருக்கும். அதேபோல், விடுமுறை நாட்களிலும் கிளினிக் திறந்திருக்க வேண்டும். ஜன.1-ம் தேதி மூடப்பட்ட கிளினிக் குறித்து விசாரிக்கப்படும் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x