Published : 02 Jan 2021 03:26 AM
Last Updated : 02 Jan 2021 03:26 AM
ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை யொட்டி திருச்சியில் உள்ள கோயில்களில் அதிகளவிலான பொதுமக்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
மாநகரின் பல பகுதிகளில் இளைஞர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர்.
ரங்கம் ரங்கநாதர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், மலைக்கோட்டை தாயுமான வர், உச்சிப்பிள்ளையார் கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயில், ஜங்ஷன் வழிவிடு முருகன் கோயில், கன்டோன்மென்ட் ஐயப்பன் கோயில், வயலூர் முருகன் கோயில், கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயில், உறை யூர் வெக்காளியம்மன் கோயில், பஞ்சவர்ணேசுவர சுவாமி கோயில், திருப்பட்டூர் பிரம்மபு ரீசுவரர் கோயில், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் உள் ளிட்ட கோயில்களில் நேற்று ஏராள மான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
அரியலூர் ஆலந்துறையார், திருமழபாடி வைத்தியநாத சுவாமி, திருமானூர் கைலாசநாதர், செந்துறை ஜெயபுரீஸ்வரர், கங்கைகொண்ட சோழபுரம் பிரக தீஸ்வரர் உள்ளிட்ட கோயில் களிலும், பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன், செட்டிக்குளம் பாலதண்டாயு தபாணி உள்ளிட்ட கோயில்க ளிலும், கரூர் பசுபதீஸ்வரர், தாந்தோணிமலை வெங்கடர மணசுவாமி, கரூர் மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தஞ்சாவூர் பெரிய கோயில், சுவாமிமலை முருகன் கோயில், புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர், சக்கரபாணி, சாரங்கபாணி கோயில்கள், திரு நாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
காரைக்கால் திருமலைராயன் பட்டினம் அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் உள்ள சைவ ஆதீன மடாலயத்தில் உள்ள பழமையான வன துர்க்கை அம்மன் கோயிலில் நேற்று நடைபெற்ற சிறப்பு அபிஷேகம், பூஜைகளில் தருமபுர ஆதீன 27-வதுகுருமகா சன்னிதானம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று, பக்தர்களுக்கு அரு ளாசி வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT