Published : 01 Jan 2021 07:53 AM
Last Updated : 01 Jan 2021 07:53 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்தாண்டு சாலை விதிகளை மீறியதால் ரூ.2.73 கோடி அபராதம் வசூல்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் சாலை விதிகளை மீறியதாக ரூ.2 கோடியே 73 லட்சத்து 81 ஆயிரம் அபராதம் வசூல் செய் யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் நேற்று வெளி யிடப்பட்ட செய்திக்குறிப்பு:

கடந்த 2020-ம் ஆண்டு மாவட்டத்தில் மொத்தம் 30,466 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில்173 திருட்டு வழக்குளில் 145 வழக் குகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதாவது, கடந்த ஆண்டில் ரூ.1கோடியே 55 லட்சத்து 59 ஆயி ரத்து 111 மதிப்பிலான நகை உட்படபொருட்கள், திருடப்பட்ட வழக்கு களில் ரூ. 88 லட்சத்து 59 ஆயிரத்து 111 மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டன.

19 கொலை வழக்குகளில் 44 பேர், 69 கொலை முயற்சி, 82 கலவர வழக்கு, 469 காய வழக்குகள் மூலம் 1,471 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கு எதிரான 105 வழக்குகள், போக்சோ பிரிவின் கீழ் 48வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. இருவர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கல்வராயன்மலையில் 366 சாராய வழக்குகளும், 2,060 சாராய கடத்தல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இவற்றின் மூலம் 10,3496 லிட்டர் கள்ளச் சாராயம், 2,24,340 லிட்டர் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டன. 98 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சாலை விதிகளை மீறியதாக 3 லட்சத்து 16 ஆயிரத்து 538 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதுதொடர்பாக ரூ.2 கோடியே73 லட்சத்து 81 ஆயிரம் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் தடை யுத்தரவை மீறியதாக 20,083 வழக் குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x