Published : 01 Jan 2021 07:54 AM
Last Updated : 01 Jan 2021 07:54 AM
திருவண்ணாமலை மாவட் டத்தில் செல்போன் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப் பிக்கலாம் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய செவித்திறன் பாதிக்கப்பட்ட அல்லது பார்வைத் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், செல்போன் பெற விண்ணப்பிக்கலாம். 2020-21-ம் நிதி ஆண்டில் கல்லூரியில் படிப்பவர்கள், வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர் மற்றும் சுய தொழில் செய் பவர்கள் விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பணிச்சான்று, கல்லூரியில் படிப்பவர்கள் கல்வி சான்று நகல், வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலக பதிவுச் சான்று, சுய தொழில் புரிபவர்கள் அதற்கான சான்று மற்றும் 2 மார்பளவு புகைப்படம் ஆகியவற்றை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒரு வாரத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT