Published : 31 Dec 2020 03:19 AM
Last Updated : 31 Dec 2020 03:19 AM
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், வில்லிபுத்தூர், ராஜ பாளையம் ஆகிய பகுதிகளில் 9 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன.
விருதுநகர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 20 இடங்களிலும், இரண்டாம் கட்டமாக 6 இடங்களிலும் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து நேற்று மூன்றாவது கட்டமாக சிவகாசி வட்டத்தில் திருத்தங்கல்- இந்திரா நகர், எம்.ஜி.ஆர்.நகர், வடபட்டி மற்றும் எம்.துரைச்சாமிபுரம் ஆகிய 4 இடங்களிலும், சாத்தூர் வட்டத்தில் படந்தால் மற்றும் ராமுதேவன்பட்டியிலும், வில்லிபுத்தூர் வட்டத்தில் மகாராஜபுரத்திலும், ராஜபாளையம் வட்டத்தில் குமரன் தெரு மற்றும் சுந்தரராஜபுரம் ஆகிய 2 இடங்களிலும் என மொத்தம் 9 இடங்களில் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. இதனை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ராம்கணேஷ் (சிவகாசி), மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பலராம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் மயில்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT