Published : 31 Dec 2020 03:20 AM
Last Updated : 31 Dec 2020 03:20 AM

மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க ஜன.3-ல் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை

கரூர்

கரூர் மாவட்ட திமுக அவசர ஆலோசனை செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் டி.ராஜேந்திரன் தலைமையில் கரூர் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.

இதில், கரூர் மாவட்ட பொறுப் பாளர் வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ, உயர்நிலை செயல் திட்டக்குழு மற்றும் சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பி னரான முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, மாநில நெசவா ளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், செயலாளர் கே.மணி, மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் என்.மணிராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர், வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தது: கரூர் மாவட்டம் வாங்கல் குப்புச்சிபாளையத்தில் ஜன.3-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் மக்கள் கிராம சபைக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, சிறப்புரையாற்றுகிறார். இதற்காக கரூர் மாவட்டத்துக்கு வரும் மு.க.ஸ்டாலினுக்கு கரூர் மாவட்ட எல்லையான நொய்யல் குறுக்குச்சாலை, திருகாம்புலியூர் ரவுண்டானா, குளித்தலை உள்ளிட்ட இடங்களில் வரவேற்பு அளிக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x