Published : 30 Dec 2020 03:17 AM
Last Updated : 30 Dec 2020 03:17 AM
நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம்முதல் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
பொது முடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், கடந்தஅக்டோபர் மாதம்முதல் மலை ரயிலை இயக்க மாவட்ட நிர்வாகம்அனுமதி அளித்தது. ஆனால் நிர்வாக காரணங்களால் மலை ரயில் இயக்கம் தொடங்கப்படவில்லை. சேவை தொடங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில், நாளை (டிச.31) முதல் மலை ரயில் தினமும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி பி.குகநேசன் கூறியதாவது:
நீலகிரி மலை ரயில் டிசம்பர் 31-ம்தேதி முதல் தினமும் வழக்கமான நேரங்களில் இயக்கப்படும். மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் ரயில், காலை 11.55 மணிக்கு உதகை வந்தடையும், மதியம் 1.45 மணிக்கு உதகையில் இருந்துபுறப்பட்டு, மாலை 5.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். உதகை-குன்னூரிடையே மூன்று முறையும் மலை ரயில்இயக்கப்படும். இந்த ரயில் முழுவதும் முன்பதிவு முறையிலேயே இயக்கப்படும். முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனும தியளிக்கப்படும்.
மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை முன்பதிவுக்கு முதல் வகுப்புக் கட்டணமாக ரூ.395, இரண்டாம் வகுப்புக்கு ரூ.130, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு முதல் வகுப்புக் கட்டணம் ரூ.295, இரண்டாம் வகுப்புக்கு ரூ.85 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மலை ரயிலுக்குள் கரோனா வழிமுறைகளை பயணிகள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT