Published : 30 Dec 2020 03:19 AM
Last Updated : 30 Dec 2020 03:19 AM

ரஜினி கட்சி தொடங்காதது யாருக்கு சாதகமாகும் என்பது முடிந்து போன ஒன்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கருத்து

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விண்ணம்பள்ளி கிராமத்தில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் பேசும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன். படம்:வி.எம்.மணிநாதன்.

வேலூர்

ரஜினி கட்சி தொடங்காதது யாருக்கு சாதகமாகும் என்பது முடிந்து போன ஒன்று என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

காட்பாடி அடுத்த விண்ணம் பள்ளி கிராமத்தில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், திமுகபொதுச்செயலாளர் துரைமுருகன் பங்கேற்றுப் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்க ளிடம் கூறும்போது, ‘‘திருவள்ளுவ ருக்கு காவி சாயம் பூசுவது, பெரியார், அம்பேத்கர், காந்தி சிலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவர் கள் பிறப்பால் மனிதராக இருந்தாலும் குணத்தால் மிருகங்கள். இதையெல்லாம் அரசு பார்த்துக்கொண்டிருக்க கூடாது. அவர்களை கண்டிக்க வேண்டும். கண்டிக்கும் அக்கறை இந்த அரசுக்கு கிடையாது. சாயம் அடிப்பது யார்? என்றும் அவர்களுக்கு தெரியும்.

நண்பர் ரஜினிகாந்த், கட்சி தொடங்குவதும், தொடங்காததும் அவரது உடல்நிலை, மனநிலை, சூழ்நிலையை பொறுத்தது. அதில் நுழைந்து நாங்கள் எந்த கருத்துக்களையும் சொல்ல விரும்பவில்லை. ரஜினி கட்சி தொடங்காதது யாருக்கு சாதகமாகும் என்பது முடிந்து போன ஒன்று.

என்னுடைய சொத்து மதிப்பு விவரத்தை தேர்தல் மனுதாக்கல் செய்தபோதே குறிப்பிட்டுள்ளேன். அதில் ஒரு குண்டு மணி கூட அதிகம் இருக்காது. ஆனால், அவர்கள் தவறான முறையில் சொத்துக்களை ஈட்டியுள்ளார்கள் என்பதை விசாரிக்கக் கோரி ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளோம். பொங்கல் பரிசை அரசு அலுவலர்கள் மூலம் தான் கொடுக்க வேண்டும். ஆனால், அதிமுகவினர் டோக்கனில் அமைச்சர் படம் போட்டு கொடுக்க இது என்ன அவர்கள் அப்பன் வீட்டு சொத்தா’’ என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x