Published : 29 Dec 2020 03:15 AM
Last Updated : 29 Dec 2020 03:15 AM
சுற்றுச்சூழல்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே பவானி ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க முடியாத நிலை உள்ளது, என அந்தியூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கொமதேக மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
அந்தியூரில், கடந்த 10 ஆண்டுகளாக நிறை வேற்றப் படாத நீர்ப்பாசனத் திட்டங்களை நிறை வேற்றிட வலியுறுத்தி, கொமதேக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேசியதாவது:
ஈரோடு மாவட்டத்தின் வறண்ட பகுதியாக அந்தியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் உள்ளன. இப்பிரச்சி னையைத் தீர்க்க மேட்டூர் உபரி நீர் பாசனத் திட்டம், மணியாச்சிப்பள்ளம் நீர்ப் பாசனத் திட்டம், கோணிமடுவு திட்டம் போன்றவற்றை அரசு நிறை வேற்ற வேண்டும். கடந்த 10 ஆண்டு களில் அதிமுக அளித்த வாக்குறுதி களில் இடம் பெற்றிருந்த நீர்ப்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப் படவில்லை.
முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்க முடியாமல் அதிமுக கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது. சுற்றுச் சூழல்துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான ஈரோட்டில், பல்வேறு இடங்களில் பவானி ஆற்றில் கழிவுநீர் கலக்கிறது. இதை அமைச்சர் கண்டு கொள்வதில்லை. சுற்றுச் சூழல்துறை ஊழல் துறையாக மாறிவிட்டது, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT