Published : 28 Dec 2020 07:17 AM
Last Updated : 28 Dec 2020 07:17 AM
ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் மத்திய அரசின் திட்டத்தால் விவசாயிகள் தற் கொலை செய்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் தெரிவித் தார்.
விழுப்புரம் மாவட்ட பாஜக அணிபிரதிநிதிகள் மாநாடு நேற்றுமாலை விழுப்புரத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு மாவட்டத்தலைவர் வி.ஏ.டி கலிவரதன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணித் தலைவர் நரேஷ்குமார் வரவேற்றார். சிறப்புவிருந்தினர்களாக மாநிலத்தலை வர் எல்.முருகன், மாநில அமைப்புப்பொதுச் செயலாளர் கேசவ விநாயகன், மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன், மாவட்ட பொறுப்பாளர் ரவி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேசன் , மாநில செயற்குழு உறுப்பினர் தியாகராஜன், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயகுமார், மாவட்ட பொருளாளர் சுகுமார், நகரத் தலைவர் ஜெய்சங்கர், மாவட்ட மகளிரணி தலைவர் சரண்யா, மாவட்ட மகளிரணி பொதுச்செயலாளர் ராஜலட்சுமி, ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் தாஸசத்யன், பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் சரவணன்,நகர பொதுச் செயலாளர் சுகுமார், ஜோதி ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற மாநிலத்தலைவர் எல்.முருகன் பேசி யது:
வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடாது என ஸ்டாலின் எதிர்த்து வருகிறார். அவரைபொறுத்தவரை விவசாயிகள் மேம்படக் கூடாது என்று திட்ட மிட்டுள்ளார். 2014-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அளவில் விவசா யிகளின் தற்கொலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு கார ணம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கும் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் 9 கோடி விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இதில், தமிழகத்தில் 41 லட்சம் விவசாயிகளும், குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவிவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்துக்கள் ஒன்று திரள்வதால் திமுகவில் இந்துக்கள் உள்ளதாக பொய் பிரச்சாரம் செய்துவருகின்றனர் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT