Published : 28 Dec 2020 07:17 AM
Last Updated : 28 Dec 2020 07:17 AM
தருமபுரியில் நாளை (29-ம் தேதி) காணொலி முறையிலும், நாமக்கல் ஆட்சியர் அலுவலகத் தில் நாளை மறுநாள் (30-ம் தேதி) நேரடி யாகவும் விவசாயி களுக்கான குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.
தருமபுரி மாவட்ட விவசாயி களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டத்தை, கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக நடப்பு மாதத்திலும் காணொலி முறையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை (29-ம் தேதி) காலை 11 மணியளவில் இந்தக் கூட்டம் தொடங்க உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடக்க உள்ள கூட்டத்தில் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள காணொலிக் காட்சி மூலம் பங்கேற்கலாம். வேளாண்மை தொடர்பான குறை கள், கோரிக்கை கள், புகார்கள் ஆகியவற்றுக்கு விவசாயிகள் இந்தக் கூட்டம் மூலம் தீர்வு தேடிக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 30-ம் தேதி காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் கூட்டத்துக்கு தலைமை வகிக்க உள்ளார். விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் சமூக விலகலைக் கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும், கை களை நன்கு சுத்தம் செய்தும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT