Published : 28 Dec 2020 07:17 AM
Last Updated : 28 Dec 2020 07:17 AM

நிதியுதவி வழங்கல்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.27 லட்சத்துக்கான காசோலைகளை ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக, கடந்த 6.8.2020-ல் தேயிலை தோட்ட பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழந்த, மானூர் வட்டம் பிள்ளையார்குளம் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட ஏசையா (58) , ரோஸ்லின் மேரி (58) , கபில்தேவ் (23) , சுடலை (எ) அச்சுதன் (55), பவுன்தாய் (47), மணிகண்டன் (23) , செல்லத்துரை (55), சுமதி (50) ஆகியோரின் வாரிசுதாரர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x