Published : 27 Dec 2020 03:16 AM
Last Updated : 27 Dec 2020 03:16 AM

உதவித்தொகை பெற்று தருவதாக கூறி கூலி தொழிலாளிகளிடம் மோசடி செய்த மதபோதகர் கைது

கைதான விக்டர் ஜேசுதாசன்.

வேலூர்

வேலூரில் கல்வி உதவித் தொகை, வீட்டுமனை பெற்றுத் தருவதாகக் கூறி, கூலி தொழிலாளிகளிடம் மோசடி செய்த மதபோதகரை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (36). கூலித் தொழிலாளி. இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர், வேலூர் சலவன்பேட்டை அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த மதபோதகர் விக்டர் ஜேசுதாசன் (58) என்பவர் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் தனது பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற்று தரக்கோரி கேட்டுள்ளார். இதற்கு, ரூ.20 ஆயிரம் செலவாகும் என விக்டர் ஜேசுதாசன் கூறியுள்ளார். அவர் கூறியபடி குமார் பணத்தையும் கொடுத்துள்ளார்.

இதேபோல், காட்பாடி காங்கேய நல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் விக்டர் ஜேசுதாசனிடம் பணம் கொடுத் துள்ளனர். ஆனால், உதவித்தொகை வாங்கி தராமல் விக்டர் ஏமாற்றி யுள்ளார். இதனால், கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு குமார் கேட்டுள்ளார். அப்போது, அவரிடம் காசோலை ஒன்றை விக்டர் ஜேசுதாசன் கொடுத்துள்ளார். அந்த காசோலை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என திரும்பியுள்ளது.

இதுகுறித்து விக்டர் ஜேசுதாசனிடம் சென்று குமார் கேட்டபோது, ஆபாச மாக பேசி மிரட்டியதாக கூறப்படு கிறது. இதையடுத்து, வேலூர் சரக டிஐஜி காமினியிடம், குமார் புகார் அளித்தார். இந்த மனுவின் மீது வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ், காவல் ஆய்வாளர்கள் இலக்குவன், கவிதா ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர். இதில், விக்டர் ஜேசுதாசன் நடத்தி வரும் அறக்கட்டளை மூலமாக பல்வேறு நபர்களுக்கு கல்வி உதவித்தொகை, வீட்டுமனை, முதியோர் உதவித்தொகை, தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்கள் போன்றவை வாங்கித்தருவதாகக் கூறி பணம் மோசடியில் ஈடுபட்டடு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, விக்டர் ஜேசு தாசனை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். இதுவரை வரப் பெற்ற புகார்களின் அடிப்படையில் ரூ.2 லட்சத்து 27 ஆயிரம் அளவுக்கு விக்டர் ஜேசுதாசன் பண மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த வர்கள் புகார் அளிக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x