Published : 26 Dec 2020 03:15 AM
Last Updated : 26 Dec 2020 03:15 AM

புதுச்சேரி, கடலூர், விழுப்புரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயம், சி.எஸ்.ஐ. தூயஜேம்ஸ் ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா.

புதுச்சேரி/விழுப்புரம்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை யொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன.

உலகெங்கும் கிறிஸ்துமஸ் பண் டிகை நேற்று கொண்டாடப்பட்டது. புதுவை ரயில் நிலையம் எதிரே உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் பங்கு தந்தை குழந் தைசாமி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து திருப்பலி நடந்தது. இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் குழந்தை இயேசுவின் சொரூபம் குடிலில் வைக்கப்பட்டது. மிஷன் வீதியில் உள்ள ஜென்மராகினி மாதாதேவாலயத்தில் புதுவை - கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

தூய யோவான் தேவாலயம், தட்டாஞ்சாவடி பாத்திமா ஆலயம், வில்லியனூர் மாதா கோயில், அரியாங்குப்பம் மாதா கோயில், ஆட்டுப்பட்டி அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட அனைத்து தேவால யங்களிலும் சிறப்பு திருப்பலியும், பிரார்த்தனையும் நடந்தது. நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் நடந்த விழாவில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்று கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ராஜ்நிவாஸில் கிறிஸ்துமஸ் விழா

புதுவை ஆளுநர் மாளிகையில்கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப் பட்டது. இதற்காக வண்ண விளக் குகளால் ஆளுநர் மாளிகை அலங் கரிக்கப்பட்டிருந்தது. ஆளுநர் கிரண்பேடி மற்றும் ராஜ்நிவாஸ் அதி காரிகள், ஊழியர்கள் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று பாட்டுப்பாடி மகிழ்ந்தனர். காணொலி மூலம் பலரும் பங்கேற்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயம், சிஎஸ்ஐ. தூயஜேம்ஸ் ஆலயம், சேவியர் காலனி தூயபவுல் மிஷினரி ஆலயம், டிஇஎல்சி.ஆலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிக்காக குடில் அமைக்கப்பட்டு கிறிஸ்து பிறப்பு பாடல்களை பாடிய படி குழந்தை ஏசு சொரூபத்தை குடிலில் வைத்து ஆராதனை நடத்தினர். தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் அனைத்து கிறிஸ்துவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

பிரார்த்தனை முடிந்த பின்னர் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கேக்குகளை வெட்டிபரிமாறியபடி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

அனைத்து தேவாலயங்களிலும் கரோனா கட்டுப்பாடுகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண் டாடப்பட்டதால் நள்ளிரவில் நடைபெற்ற ஆராதனையில் பங்கேற்க முடியாத கிறிஸ்தவர்கள் நேற்றுநடந்த ஆராதனைகளில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

இதேபோல் கடலூர் மாவட் டத்தில் பல்வேறு கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு ஆராத ணைகள் நடைபெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x