Published : 24 Dec 2020 07:24 AM
Last Updated : 24 Dec 2020 07:24 AM

வளரும் நாடுகளில் கரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் நோய் தடுப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

வேலூர் அடுத்த இடையன்சாத்து பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் கே.சி.வீரமணி. அருகில், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர். படம்:வி.எம்.மணிநாதன்.

வேலூர்

வளரும் நாடுகளில் கரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருவதால், தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் அதிகரிக் கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டு வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் முதற் கட்டமாக சத்துவாச்சாரி, சித்தேரி, அணைக்கட்டு உள்ளிட்ட 7 இடங்களில் கடந்த வாரம் மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளி மலை, வண்டறந்தாங்கல், செஞ்சி, குடியாத்தம் காந்தி நகர் உள்ளிட்ட 4 இடங்களில் மினி கிளினிக் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மினி கிளினிக்கு களை திறந்து வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘மினி கிளினிக் குகள் ஏழை, எளிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 106 இடங்களில் மினி கிளினிக்குகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதில், முதற்கட்டமாக வேலூர் மாவட்டத்தில் 11, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10, திருப்பத்தூர் மாவட்டத்தில் 14 என மொத்தம் 35 இடங்களில் மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 6 ஆயிரம் பேர் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக வருகின்றனர்.

கரோனா காலத்திலும் தமிழக அரசு திறம்பட செயலாற்றி மற்ற மாநில அரசுகளுக்கு முன் உதாரணமாக விளங்குகிறது. மினி கிளினிக் திறப்பு திட்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாத திமுகவினர் அரசு மீது வீண் பழி சுமத்துகின்றனர். சட்டப்பேரவை தேர்தல் வரஇருப்பதை முன்னிட்டு கிராம சபா கூட்டத்தையும் நடத்தி வருகின்றனர். அனைத்தையும் தமிழக மக்கள் கவனித்துக்கொண்டு தான் இருக்கின்றனர். வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக வினருக்கு தமிழக மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்.

வளரும் நாடுகளில் தற்போது கரோனா தொற்று புதிய வடிவில் பரவ தொடங்கியுள்ளதால், தமிழ கத்தில் நோய் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் விழிப்புடனும், கவனமுடன் இருக்க வேண்டும். அரசு கூறிய வழிகாட்டு நெறி முறைகளை கட்டாய மாக பின்பற்ற வேண்டும்’’என்றார்.

அணைக்கட்டு

பின்னர், அணைக்கட்டு வட்டத் தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு துறைகள் சார்பில் 600 பயனாளிகளுக்கு ரூ. 6 கோடியே 38 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, அணைக் கட்டு பகுதியில் ரூ.34.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தகத்தை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார். இதையடுத்து, வேலூர் அடுத்த இடையன்சாத்து பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 553 பயனாளிகளுக்கு 3 கோடியே 73 லட்சத்து 59 ஆயிரம் மதிப் பில் நலத்திட்ட உதவிகளை அமைச் சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், டிஆர்ஓ பார்த்திபன், ஆவின் தலைவர் வேலழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x