Published : 23 Dec 2020 03:16 AM
Last Updated : 23 Dec 2020 03:16 AM

பொங்கல் பண்டிகைக்கு வழங்கவிலையில்லா வேட்டி, சேலை தயார்

உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக வருவாய்த் துறை மூலமாக ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் தேவையான வேட்டி, சேலைகள் இருப்பு வைக்கும் பணி தொடங்கியுள்ளது.

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘உடுமலை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் விலையில்லா வேட்டி, சேலை பெற தகுதியான பயனாளிகளின் எண்ணிக்கை 65,000-ஆக உள்ளது. முதற்கட்டமாக 30,000 வேட்டி, சேலைகள் வந்துள்ளன. எஞ்சியுள்ளவை அடுத்தகட்டமாக கொண்டு வரப்படும். அரசின் உத்தரவுக்குப்பின் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x