Published : 23 Dec 2020 03:17 AM
Last Updated : 23 Dec 2020 03:17 AM
திருநெல்வேலியில் மாவட்ட தொழில் வர்த்தக சங்க 71-வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் குணசிங் செல்லத்துரை தலைமை வகித்தார். செயலாளர் ஜி.எஸ். ஜனார்த்தனன் ஆண்டு அறிக்கை வாசித்தார்.
திருநெல்வேலி மாநகரில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. குறிப்பாக நயினார்குளம் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாராஜ நகர் ரயில்வே மேம்பாலத்தை தெற்கு ரயில்வே விரைவில் கட்டி முடிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வியாபாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்ற தலைப்பில் மதுரை வைகை குரூப் சேர்மன் வி.நீதிமோகன் ஆலோசனை வழங்கினார். சங்க இணைச் செயலாளர் சோனா வெங்கடாசலம் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT