Published : 23 Dec 2020 03:17 AM
Last Updated : 23 Dec 2020 03:17 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு ‘ஆட்சி மொழி சட்ட வாரம்’ கொண்டாடப் படவுள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறைதுணை இயக்குநர் ப.ராஜேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், "தமிழ் ஆட்சி மொழி சட்டம் கடந்த 1956-ம் ஆண்டு இயற்றப்பட் டது. இதையொட்டி, ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் ‘ஆட்சி மொழிச் சட்ட வாரம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் டிசம்பர் 23-ம் தேதி (இன்று) முதல் 29-ம் தேதி வரை 7 நாட்களுக்கு தினசரி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளது. திருப்பத் தூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங் 2கள், கடைகள், உணவகங்கள் ஆகியவற்றில் தமிழ் மொழி குறித்த துண்டுப்பிரசுரங்கள் வழங்கு தல், தமிழ் மொழி குறித்த விழிப் புணர்வு மற்றும் ஒட்டுவில்லைகள், பதாகைகள் அரசு அலுவலங்களில் இடம் பெறும்.
தமிழ் மொழியில் இல்லாத பெயர் பலகைகள் உடனடியாக தமிழ் மொழியில் மாற்றி அமைத்து தமிழ் மொழி குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தைச்சேர்ந்த அரசு அலுவலர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளந்தமிழர் இலக்கியப்பயிற்சிப்பட்டறை மாணவர்கள் ஆகியோர் மூலம் 7 நாட்களுக்கு தமிழ் மொழி குறித்த பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
டிசம்பர் 23-ம் தேதி முதல் 29-ம்தேதி வரை நடைபெறும் ஆட்சி மொழி சட்ட வார நிகழ்ச்சிகளில் தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள் மட்டுமின்றி பொது மக்களும் திரளாக கலந்து கொள்ளலாம். இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தொடங்கி வைப்பார்’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT