அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது

Published on

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் செவிலிமேடு, ஐயங்கார் தெருவைச் சேர்ந்தவர் சீனுவாசமூர்த்தி. இவர்ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கும்பகோணத்தைச் சேர்ந்த ஏசுராஜ் என்பவர் சமீபத்தில் சீனுவாசமூர்த்திக்கு அறிமுகமாகியுள்ளார். இவரிடம் இவரது மகன்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஏசுராஜ் கூறியுள்ளார்.

இவர் தனது மகன்கள், தனக்கு தெரிந்தவர்கள் என 7 பேருக்கு வேலை வாங்கித் தர ரூ.40 லட்சம் பணத்தை ஏசுராஜிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் வேலைவாங்கித் தரவில்லை. இதனால் சீனுவாசமூர்த்தி கொடுத்த நெருக்கடியில் ஏசுராஜ் ரூ.40 லட்சத்துக்கான காசோலையைகொடுத்துள்ளார். அந்த காசோலையை வங்கியில் போட்டபோது பணம் இல்லாமல் திரும்பியது.

இது தொடர்பாக சீனுவாசமூர்த்தி டிஐஜி சாமுண்டீஸ்வரியிடம் புகார் செய்தார். இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஏசுராஜை கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in