Published : 20 Dec 2020 03:15 AM
Last Updated : 20 Dec 2020 03:15 AM

ராமநாதபுரத்தில் தொடர் மழை வேகமாக நிரம்பிவரும் ஊருணிகள்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பெய்துவரும் தொடர் மழையால் நகரில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சியளித்தது. ஊருணிகள், கண்மாய்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் நகரில் அரசு மருத்துவமனை சாலை, அக்ரஹாரம் ரோடு, தங்கப்பாபுரம், வசந்தநகர், காட்டூரணி, பாரதிநகர், ஓம்சக்தி நகர், நாகநாதபுரம் ஆகிய தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம் போல காணப்பட்டது. நகரின் பிரதான சாலையான அரசு மருத்துவமனை சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டுநர்கள் சிரமப்பட்டனர். தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்ற நகராட்சியினர் எடுத்து வரும் நடவடிக்கைகளை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் பார்வையிட்டார்.

ராமநாதபுரம் நகரில் உள்ள முகவை ஊருணி, நீலகண்டி ஊருணி, சாயக்காரத் தெரு ஊருணி உள்ளிட்ட பல ஊருணிகள் நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி மழை பதிவு விவரம் (மி.மீ.ல்): தங்கச்சிமடம்- 36, பாம்பன்- 32, ராமநாதபுரம்- 31, வட்டாணம்- 30, தீர்த்தாண்டதானம்- 28 6.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x