Published : 20 Dec 2020 03:15 AM
Last Updated : 20 Dec 2020 03:15 AM
கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் பாஜக சார்பில், 'விவசாயிகளின் நண்பன் மோடி' என்ற தலைப்பில் விவசாயிகள் சந்திப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமை வகித்தார்.
மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், தஞ்சாவூர் வடக்கு மாவட்டத் தலைவர் சதீஷ், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் எம்.ஆர்.கணேஷ், விவசாய பிரிவு மாநிலச் செயலாளர் வரதராஜன், துணைத் தலைவர் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, அரியலூர் மாவட்டம் தா.பழூரில் பாஜக சார்பில் மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்த விவசாயிகள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் எல்.முருகன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோகுல்பாபு, மருத்துவர் அணி மாவட்டச் செயலாளர் பரமேஸ்வரி, மகளிரணி மாவட்டச் செயலாளர் நந்தினி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT