Published : 19 Dec 2020 03:14 AM
Last Updated : 19 Dec 2020 03:14 AM
பூண்டி ஏரியில் இருந்து சோழவரம் ஏரிக்கு தண்ணீர் விரைவாக சென்றடைய பூண்டி பேபி கால்வாய் உள்ளது.
இக்கால்வாயில் கூடுதல் நீரை எடுத்துச் செல்லும் வகையில் கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த நேற்று தமிழ்நாடு நீர்வள ஆதாரங்கள் பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்புக் கழக தலைவர் சத்தியகோபால் இக்கால்வாய் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில், பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் பேபி கால்வாய் பகுதி, மோவூர், விளாப்பாக்கம், ராமராஜ கண்டிகை, வெள்ளியூர் மற்றும் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் செல்லும் பேபி கால்வாயின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது, சத்தியகோபால் தெரிவித்ததாவது: பேபி கால்வாயில் தற்போது 3 மீட்டர் ஆழமே இருப்பதால் குறைவான அளவு நீரே செல்கிறது.
ஆகவே, இக்கால்வாயை ஆழமாகவும் அகலமாகவும் மேம்படுத்தநடவடிக்கை எடுக்கப்படுகிறது. கால்வாய் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டால் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அவைஅகற்றப்படும்.
மழைக் காலங்களில் ஆரணியாற்று வெள்ளநீர் உபரியாக கடலில் கலக்காமல், அதை சேமிக்கும் வகையில் பெரியபாளையம் அருகே உள்ள கல்பட்டு அணையின் உயரத்தை அதிகப்படுத்தி, வெள்ள நீர் ஆரணியாற்றில் இருந்து வடமதுரை ஏரியின் வழியாக கொசஸ்தலையாற் றுக்கு சென்றடையும் வகையில் புதிதாக இணைப்பு கால்வாய் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT