Published : 18 Dec 2020 03:17 AM
Last Updated : 18 Dec 2020 03:17 AM
தமிழக அரசு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் மாநில குழுக் கூட்டம் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. நிறைவுநாளான நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:வரும் சட்டப்பேரவைத் தேர்தலில்திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை நாம் வெற்றிபெறச் செய்ய வேண்டும். மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.மின்சார திருத்த சட்ட மசோதாவையும் திரும்பப் பெற வேண்டும்.
தமிழக அரசு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். லாரி உரிமையாளர்களின் பிரச்சினைக்குதீர்வு காண வேண்டும். மருத்துவமேற்படிப்பில் 50 % இட ஒதுக்கீட்டைஅமல்படுத்த வேண்டும் என்பனஉள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மூத்த தலைவர் தா.பாண்டியன், மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, திருப்பூர் மாவட்ட செயலாளர் எம்.ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.
பின்னர் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தருமபுரி மக்களவை உறுப்பினர்செந்தில்குமாரை தாக்க முயற்சித்தது ஜனநாயக விரோதபோக்காகும். மத்திய பாஜக அரசு தரும் நிர்பந்தம் காரணமாக, தமிழக முதல்வர் வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறார். அரசு சார்பில் நடத்தப்படும் கருத்துக் கேட்பு கூட்டங்களுக்கு எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை அழைக்காமல் இருப்பது தவறான அணுகுமுறை. உலகம் முழுவதும் இரண்டு கொள்கைதான். ஒன்று வலதுசாரி. மற்றொன்று இடதுசாரி. இவற்றை தவிர்த்து மூன்றாவதாக ஒரு கொள்கை இருக்க முடியாது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT