Published : 18 Dec 2020 03:17 AM
Last Updated : 18 Dec 2020 03:17 AM
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தைப் பிரிப்பதற்கு முன் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 49 காவல் நிலையங்கள் இயங்கி வந்தன.
மாவட்டப் பிரிப்புக்கு பிறகு, விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது 30 பொது காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. மேலும், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், போக்குவரத்து காவல் நிலையங்கள், மதுவிலக்கு காவல் நிலையங்கள் தலா 4 இயங்கி வருகின்றன. மக்கள் தொகை பெருக் கத்தை கருத்தில் கொண்டு திருவெண்ணெய்நல்லூரை தனி வருவாய் வட்டமாக அரசு அறிவித்துள் ளது. இதற்கிடையே விழுப்புரம் மாவட்டத்தில் அரசூர், மேல்மலை யனூரில் புதிய காவல் நிலையங் கள் திறக்கப்பட உள்ளது. இதற் கான அறிவிப்பு முறைப்படி விரைவில் அறிவிக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின் றன. மேல்மலையனூரில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் கணேஷ்குமார், மஸ்தான் ஆகியோர் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT