பண்ணைய திட்ட செயல்பாட்டை  இணை இயக்குநர் ஆய்வு

பண்ணைய திட்ட செயல்பாட்டை இணை இயக்குநர் ஆய்வு

Published on

கிருஷ்ணகிரியில் பண்ணைய திட்ட செயல்பாடுகளை வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் வேளாண்மைத் துறை மூலம் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ், ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தினை வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். இத் திட்டத்தில் ஒவ்வொரு பயனாளிக்கும், ஒரு கறவை மாடு, ஆடுகள் (1 ஆண், 9 பெண்), கோழிகள் (9 பெண், 1 ஆண்) வாங்குதல், மண்புழு உரக்குடில் அமைத்தல், மா செடிகள் (20 எண்கள்) நடவு செய்தல், தேன் பெட்டிகள் ( 2 எண்கள் ) அமைத்தல், ராகி செயல் விளக்கத்திடல் அமைத்தல் போன்ற அனைத்துக்கும் சேர்த்து 50சதவீதம் மானியமாக ரூ.60 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் நாரலப்பள்ளி கிராமத்தில் கறவை மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு காப்பீடு செய்யும் பணியை வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் கிருஷ்ணன், உதவி இயக்குநர் முருகன், வேளாண்மை அலுவலர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி அலுவலர் விஜயன் செய்திருந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in